இளையராஜா இசையில் திருவுடையான் பாடி இன்னும் வெளிவராத அகதிகளுக்கான பாடல்

 

 

rajj23

சமீபத்தில் சாலை விபத்தில் மரணம் அடைந்த திருநெல்வேலி, கரிசல் குயில் பாடகர் திருவுடையான் சினிமா  படங்களில் பின்னணி பாடல் பாடியவர் என்பது தெரிந்ததே.ஆனால்.சினிமாவை விட மக்களுக்கான பாடல் பாடுவதில் மிகவும் நாட்டம் கொண்டவர். மக்களுக்கான கருத்துக்களை மிக எளிமையான வார்த்தைகளில், அழகுற நாட்டுப் புறப் பாடல்களாகப் பாடி மக்கள் மனதைக் கவர்ந்தவர் திருவுடையான். வெண்கலக் குரலால் அவர் பாடிய பாடல்கள் மக்களைத் தட்டி எழுப்பியவை. இடதுசாரி கட்சில் [மார்க்சிஸ்ட்] இருந்தவர்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்திலும் இருந்து மக்களுக்கான பாடல்களை பாடியவர்.2009 ல்  நடந்த இனப்படுகொலையின் போது இடதுசாரிகளின் நிலைபாட்டை வெளிப்படையாக விமர்சித்தவர். அவருடைய  புதிய பாடல் ஒன்றை பாடகரும் இலக்கியவாதியுமான  ரவிசுப்பிரமணியன் என்கிற நண்பர் முகநூலில் பதிவேற்றம் செய்து இருக்கிறார். இளையராஜா இசையில் திருவுடையான் பாடியிருக்கும் இந்த பாடல் ஈழ அகதிகளை குறித்து பாடுவதாக அமைந்து இருக்கிறது.

‘’எத்தனையோ மாற்றங்களை கண்டிருக்கும் பூமி.

எமை திக்கற்றதோர் அகதிகளாய் மாற்றிவிட்ட பூமி’’

நல் உறவு என்றே சொல்லி எமை விழுங்குகின்ற பூமி’’

இளையராஜா இசையில் நண்பர் திருவுடையான் பாடி இன்னும் வெளிவராத பாடல் என்று  அவர் நினைவாக பதிவேற்றம் செய்யப்பட்டிருகிறது

பாடல் இணைப்பு


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top