மாட்டிறைச்சி தின்றதால்தான் உசைன் போல்ட் 9 தங்கப்பதக்கங்களை வென்றார்: பா.ஜ.க. எம்.பி. சர்சை!

தெற்கு டெல்லி தொகுதியை சேர்ந்த பாராளுமன்ற மக்களவை உறுப்பினராக பதவி வகிப்பவர், உதித் ராஜ். தலித் வகுப்பைச் சேர்ந்த இவர், ஒலிம்பிக்கில் இந்தியா அதிக அளவில் பதக்கங்களை வெல்ல தவறியது தொடர்பாக தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

SAMUL

கென்யா, ஜமைக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் விளையாட்டுத்துறைக்கும், வீரர் – வீராங்கனைகளின் பயிற்சிக்கும் இந்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து, மிகப்பெரிய தொகையை செலவு செய்து வருகிறது.

எனினும், போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை. விளையாட்டுத்துறையில் ஊழல் பெருகி விட்டது என்று சாக்குப்போக்கு கூறிக்கொண்டு நமது வீரர் – வீராங்கனைகள் இருந்து விடக்கூடாது.

ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் ஏழைதான். ஆனால், இருவேளையும் மாட்டிறைச்சியுடன் சேர்ந்த உணவை சாப்பிடும்படி தனது பயிற்சியாளர் கூறியபடி அவர் நடந்து கொண்டதால் ஒலிம்பிக் போட்டிகளில் அவரால் தொடர்ந்து  9 தங்கப்பதக்கங்களை வெல்ல முடிந்தது.

அதேபோல், நமது பின்னடைவான அம்சங்களை எல்லாம் சாத்தியமான முறைகளில் நாம் வென்று சாதனை படைக்க வேண்டும் என பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி. உதித் ராஜ் கூறியுள்ளார்.

உசைன் போல்ட் போன்றவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை தங்கள் வாழ்க்கைக்கு ஒருபாடமாக இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தடைகளை வென்று அவர் வழிகளையும், வாய்ப்புகளையும் கண்டறிந்ததுபோல் நமது வீரர் – வீராங்கனை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாட்டிறைச்சி பிரச்சனை என்பது பா.ஜ.க.வின் உணர்வுபூர்வமான ஒரு பிரச்சனையாக இருந்து வரும் நிலையில், பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெறும் பல்வேறு மாநிலங்களில் மாடுகளை இறைச்சிக்காக அறுக்கவும், மாட்டிறைச்சி விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இறந்த மாட்டின் தோலை உரித்ததாக சில தலித்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவரும் சூழலில், தலித் வகுப்பை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. உதித் ராஜ், இதுபோன்ற கருத்தை உதிர்த்துள்ளது கட்சியின் மேல்மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top