போராட்டக்காரர் களுக்கு எதிரான நடவடிக்கைக்கு காஷ்மீர் சீக்கியர்கள் கண்டனம்

201608291843056809_Sikhs-condemn-use-of-force-against-protesters-in-Kashmir_SECVPF

ஜம்மு காஷ்மீரில், கடந்த ஜூலை 8-ந்தேதி காஷ்மீர் போராளி புர்கான் வானி இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன.  சுமார் இரு மாதங்களாக ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்களால் அங்கு, இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மக்களுக்கு எதிராக ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அம்மாநிலத்தில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

போராட்டக்காரர்களை அடக்குவதற்காக அவர்கள் மீது ராணுவம் பெல்லட் குண்டுகளை பயன்படுத்துவதுடன் அவர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களை சூறையாடுகின்றனர். இதனால் அங்குள்ள வன்முறைகள் குறையாது. மேலும் அதிகரிக்கும் என்று அங்குள்ள சீக்கிய அமைப்பு ஒன்றின் தலைவர் நரீந்தர் சிங் கல்சா கூறுகின்றார்.

மேலும், இதுகுறித்து ஐ.நா. சபை மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top