மெட்ரோ ரயில் திட்டதிற்கான நில இழப்பீட்டு தொகையை 2 வாரத்தில் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

supreme courtசென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிக்காக கையகப்படுத்தும் நிலத்திற்கான இழப்பீட்டு மதிப்பை தமிழக அரசு நில உரிமையாளர்களுக்கு 2 வாரத்தில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவுரா, சென்ட்ரல் டவர் ஓட்டல்கள் இழப்பீடு மதிப்பீட்டை சரியாக நிர்ணயித்து இன்னும் 2 வாரத்தில் வழங்க வேண்டும் என்றும், அதே போல 2 ஓட்டல்களும் இன்னும் இரண்டு வாரத்தில் அந்த இடத்தில் இருந்து காலி செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்பொழுது அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இவ்விரு ஓட்டல்களும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top