டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடியும் வரை பிரதமராக ஷின்ஸோ அபே நீடிக்க வேண்டும்: 60 சதவீதம் ஜப்பானிய மக்கள் கருத்து

201608291003218814_Majority-want-Japan-PM-Abe-to-stay-on-until-Tokyo-2020_SECVPF

ரியோ டி ஜெனீரோ நகருக்கு அடுத்தபடியாக ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் வரும் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் ஜப்பான் நாட்டின் மிகப்பிரபலமான ’நிக்கேய்’ வர்த்தக நாளிதழ் கடந்த 26 முதல் 28-ம் தேதிவரை பல்வேறு தரப்பு மக்களிடையே எடுத்த கருத்துக் கணிப்பில், ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடியும்வரை ஜப்பானின் பிரதமராக ஷின்ஸோ அபே நீடிக்க வேண்டும் என 62 சதவீதம் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் 12 தங்கப்பதக்கம் உள்பட 41 பதக்கங்களை ஜப்பான் வென்றது. இதுமட்டுமின்றி ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவுவிழாவில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஜப்பான் மக்களால் பெரிதும் விரும்பப்படும் கம்ப்யூட்டர் கதாபாத்திரமான ‘சூப்பர் மரியோ’ போல் உடையணிந்து வித்தியாசமான முறையில் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தது நினைவிருக்கலாம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top