சிரியாவில் துருக்கி விமானப் படைகள் குண்டு மழை: 65 பேர் பலி

201608290846214395_40-dead-as-Turkish-shelling-raids-hit-Syrian-civilians_SECVPF

சிரியாவின் ஜராபுலுஸ் நகரின் தெற்கேயுள்ள ஜெப் எல்-குஸ்ஸா கிராமப் பகுதியில் துருக்கி நாட்டு விமானப்படைகளும், பீரங்கி வாகனங்களும் நேற்று நடத்திய ஆவேச தாக்குதலில் பொதுமக்களில் 20-க்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும் சுமார் 50 பேர் காயமடைந்ததாகவும் சிரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கி படைகளின் தாக்குதலில் 25 குர்திஷ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அல்-அமர்னே நகரிலும் துருக்கி படைகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாகவும் 25-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய தாக்குதலில் மட்டும் பொதுமக்களில் சுமார் 70 பேர் பலியானதாக குர்து இனத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தெரிவித்துள்ள நிலையில் அரசின் அதிகாரபூர்வ எண்ணிக்கை 40 ஆகவே காணப்படுகிறது.

தொடர்ந்து சிரியா எல்லையில் உள்ள கிராமப்புறங்களை நோக்கி முன்னேறிவரும் துருக்கி படைகளின் தாக்குதலில் தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்படலாம் என உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Scroll To Top