விடுமுறையை தொடர்ந்து தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

201608290515225320_4day-holiday-following-the-Tamil-Nadu-Assembly-meets-again_SECVPF

4 நாள் விடுமுறையை தொடர்ந்து தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. போக்குவரத்து துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

தமிழக பட்ஜெட் கடந்த மாதம் (ஜூலை) 21-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான பொது விவாதம், அதே மாதம் 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. 29-ந் தேதி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் உரை ஆற்றினார்.

இந்த நிலையில், இம்மாதம் 1-ந் தேதி முதல் அரசுத் துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை (22-ந் தேதி) காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசியதுடன், இறுதியில் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

தொடர்ந்து, மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வந்த நிலையில், 25-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தியையட்டி, அரசு விடுமுறை விடப்பட்டது. எனவே, அன்றைய தினம் சட்டசபைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு நாள் இடைவெளியில் சனி, ஞாயிற்றுக் கிழமை வந்ததால், 26-ந் தேதியும் (வெள்ளிக்கிழமை) சட்டசபை கூட்டம் நடத்தப்படவில்லை.

இவ்வாறு சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில், சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. வழக்கம் போல் இன்றைய கூட்டமும் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் – நிர்வாகம், போக்குவரத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிலளிக்கிறார். இறுதியில் தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top