சாலையில் இரும்பு தடுப்புகளை வைத்து இடையூறு: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், ‘தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடந்த 17-ந் தேதி சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Tamil-nadu-court-notice-road-iron-blockade-keep-disrupt_SECVPF

இதையடுத்து கடந்த 22ந் தேதி போலீஸ் மானிய கோரிக்கையின் போது, தலைமை செயலகம் அமைந்துள்ள சாலையை போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர்.

இதை கேள்விப்பட்டு புகைப்படம் எடுக்க சென்றபோது, என்னை எஸ்பிளனேடு போலீசார் தடுத்து நிறுத்தி சட்டவிரோத காவலில் வைத்து விட்டனர்.

போலீசார் அமைத்திருந்த சாலை தடுப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் அவதிப்பட்டனர். ஒரு மோட்டார் சைக்கிள் மீது போலீஸ் அதிகாரி சென்ற வாகனம் மோதியது.

எனவே, இந்த சாலையில் தடுப்பை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தும். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகா தேவன் ஆகியோர் விசாரித்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top