புதுவையில் 29-ந்தேதி நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்

201608271021321442_narayanasamy-budget-field-in-puducherry-assembly_SECVPF

புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 24-ந்தேதி (புதன்கிழமை) கவர்னர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது.

வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் பங்கேற்று பேசினர்.

பின்னர் இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பேசிய பின் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை நாட்களாகும்.

நிதி அமைச்சர் பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முதன் முறையாக வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

அதில், காங்கிரஸ் அரசின் புதிய திட்டங்கள், அறிவிப்புகள், புதிய தொழில் கொள்கை, வேலைவாய்ப்பு உருவாக்கல், வருவாயை பெருக்குவது தொடர்பான அரசின் கொள்கை அறிவிப்புகள் இடம்பெறலாம் என தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top