வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் 10-ந்தேதி வரை இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

201608270728310753_TNSTC-announcement-special-buses-to-Velankanni_SECVPF

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வேளாங்கண்ணிக்கு சென்னை, பெங்களூரு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கோவை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை 25-ந்தேதி (நேற்று முன்தினம்) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி வரை இயக்குகிறது.

பயணிகளின் வசதிக்காக முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் விரும்பும் ஊர்களில் இருந்து வேளாங்கண்ணி செல்லவும், பின்னர் அங்கிருந்து பயணிகள் திரும்பிடவும் ஒரே நேரத்தில் முன்னதாக முன்பதிவு செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

மேற்கண்ட தகவல் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top