உலகத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் தீபிகா படுகோனேவுக்கு 10-வது இடம்

அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

deepika-padukone-10th-highest-paid-actress-in-the-world-in_SECVPF

இதில் முதல் முறையாக இந்திய நடிகை 10 இடத்துக்குள் வந்துள்ளார். பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே ஆண்டுக்கு 67.70 கோடி சம்பளம் பெற்று 10-வது இடத்தில் உள்ளார்.

அவர் நட்சத்திர நடிகையாக உருவாகி வருகிறார் என்றும் அந்த பத்திரிகை பாராட்டி உள்ளது.

சமீபத்தில் தீபிகா நடித்த இந்தி படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.

தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். பிரபல நடிகர் வின்டீசலுடன் நடிக்கும் படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

போர்ப்ஸ் வெளியிட்டு இருந்த பட்டியலில் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அவர் ஆண்டுக்கு ரூ.308 கோடி சம்பளம் பெறுகிறார்.

மெலிசா மெக்கார்தி 2-வது இடத்திலும், ஸ்கார்லெட் ஜோஹென்ஸ் 3-வது இடத்திலும் உள்ளனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top