பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை கண்டித்து கண்டன பொதுக்கூட்டங்கள்; தி.மு.க. மகளிர் அணி தீர்மானம்

தமிழகத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பற்ற நிலையை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளதாக தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

201604171530347737_alangudi-constituency-change-for-dmk-members-protest_SECVPF

தி.மு.க. மகளிர் அணியின் தொண்டர் அணி, பிரசாரக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, பிரசாரக்குழு மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

.பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொண்டு, பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற பி.வி.சிந்து மற்றும் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற சாக்க்ஷி மாலிக் ஆகிய விளையாட்டு வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்து 335 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.

கடந்த சில மாதங்களாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதை கண்டித்து தமிழகமெங்கும் ‘கண்டன பொதுக்கூட்டங்கள்’ நடத்தப்படும் மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top