மத்திய மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது

மத்திய மியான்மரில் இன்று 6.8 ரிக்டர் என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய எல்லையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான பீகார், அசாம், மேற்கு வங்காளம், மணிப்பூர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

கொல்கத்தாவில் 10 நொடிகள் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் குலுங்கியதால் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

கொல்கத்தாவில் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டு, சிறிது நேரத்திற்குப் பின்னர் மீண்டும் தொடங்கியது. பாட்னாவில் மூன்று வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் அரியானா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் 3.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top