அமெரிக்க ஓபன் போட்டித் தரவரிசை: ஜோகோவிச், செரீனா முதலிடம்

US-Open-tournament-rankingsDjokovic-Serena-tops_SECVPF

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 29–ந்தேதி முதல் செப்டம்பர் 11–ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டித் தரவரிசை வெளியிடப்பட்டது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்கு முதலிடமும், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருக்கு 2–வது இடமும், ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவுக்கு 3–வது இடமும் வழங்கப்பட்டது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் 4 இடங்களில் முறையே நடப்பு சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோர் பெற்றுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top