குஜராத்தில் ரெயில் மறியல் செய்ய தலித் போராட்ட இயக்கம் -ஜிக்னேஷ் மேவானி அழைப்பு

குஜராத் மாநிலத்தில் விரைவில் ரெயில் மறியலில் ஈடுபட தயாராக இருக்கும்படி தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து போராட்ட இயக்கம் நடத்திவரும் ஜிக்னேஷ் மேவானி அறிவித்துள்ளார்.

உனா தலித் அட்யச்சார் லடாய் சமிதி என்ற பெயரில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து போராட்ட இயக்கம் தொடங்கியுள்ள ஜிக்னேஷ் மேவானி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி, அசாம்கர், காசியாபாத் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தனது போராட்ட இயக்கத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

sri

இந்த போராட்டம் தொடர்பாக, லக்னோ நகரில் நேற்று பேட்டியளித்த அவர், உனா பகுதியில் மாட்டு தோலை உரித்ததாக தலித்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, அதுபோன்ற வேலையை தலித் மக்கள் கைவிட்டு விட்டனர் என்று குறிப்பிட்டார்.

இந்த பேட்டியின்போது அவர் கூறியதாவது:-

குஜராத்தில் வாழும் தலித் மக்கள் கிராமங்களின் ஒதுக்கப்புறமான பகுதிகளில் குடிவைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற மனப்போக்குக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். குஜராத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதிக்கும் குறைவான கூலிகூட கிடைப்பதில்லை.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய குறைந்தபட்ச விலை நிர்ணயம் ஏதுமில்லை. விவசாய நிலங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு, தொழிலதிபர்களுக்கு தானமாக வழங்கப்பட்டு வருகின்றன.

மேல்சாதியினர் மிருகங்களைப் போல் எங்களை நடத்துவதற்கு நீதி கிடைக்க வேண்டும். உங்கள் பசுக்களை நீங்களே வைத்து கொள்ளுங்கள், உங்கள் நிலங்களை எங்களிடம் ஒப்படையுங்கள். செத்த பிராணிகளை நீங்கள் கவனித்து கொள்ளுங்கள், விவசாய வேலைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

இதுவரை சுமார் 20 ஆயிரம் தலித்கள் மாடுகளை புதைக்கும் தொழிலை வேலையை தலித் மக்கள் கைவிட்டு விட்டனர். நீங்களும் இந்த வேலையை விட்டுவிட்டு இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வாழும் தலித் மக்களும் எங்கள் போராட்டத்தில் இணைய வேண்டும்.

எங்கள் இயக்கத்தின் சார்பில் விரைவில் குஜராத் மாநிலத்தில் மாபெரும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் நீங்கள் எல்லாம் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிக்னேஷ் மேவானியுடன் சமூக சேவகரான டீஸ்டா செதல்வாடும் தலித் எதிர்ப்பு கொள்கைக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top