போராட்டம் நடத்திய 126 வக்கீல்கள் இடைநீக்கம் வாபஸ்: பார் கவுன்சில் உத்தரவு

வக்கீல்கள் சட்டத்தில் ஐகோர்ட்டு கொண்டு வந்த திருத்தத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

baraa

இதன் தொடர்ச்சியாக ஐகோர்ட்டை கடந்த மாதம் 25-ந்தேதி வக்கீல்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை நடத்தக் கூடாது என்று பார் கவுன்சில் எச்சரிக்கை செய்தும் வக்கீல்கள் அதை பொருட்படுத்தவில்லை.

போராட்டத்தை முன்னின்று நடந்தும் வக்கீல்கள் அறிவழகன் உட்பட 126 வக்கீல்கள் வக்கீல் தொழிலில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து நடந்த பல்வேறு பேச்சு வார்த்தையை தொடர்ந்து, போராட்டம் கை விடப்பட்டது. இதையடுத்து 126 வக்கீல்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடை நீக்கம் உத்தரவை திரும்ப பெறுவதாக அகில இந்திய பார் கவுன்சில் இன்று உத்தரவிட்டுள்ளது.

பார் கவுன்சில் இந்த முடிவை வரவேற்பதாக ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் செயலாளர் அறிவழகன் கூறினார். மேலும் அவர், கடந்த ஓர் ஆண்டு முதல் சஸ்பெண்டு செய்யப்பட்ட வக்கீல்களுக்கு எதிரான உத்தரவுகளையும் திரும்ப பெற வேண்டும் என்றார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top