இயக்குநர் சுசீந்திரனின் உன்னத சாதனை

201608211321111833_Director-Suseenthiran-breaking-record_SECVPF

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் ‘மாவீரன் கிட்டு’. இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். மேலும், பார்த்திபன், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜுலை மாதம் 15-ந் தேதி தொடங்கியது.

இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கி 37 நாட்களில் இப்படத்தின் 95 சதவீத படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்து சாதனை படைத்துள்ளனர். சுசீந்திரன் இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்த ‘அழகர்சாமியின் குதிரை’ படத்திற்கு பிறகு இந்த படத்தில்தான் இரவு-பகல் பாராமல் ஞாயிற்றுக்கிழமையில் கூட படக்குழுவினர் பணியாற்றி புதிய சாதனை படைத்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. 37 நாட்களில் ஒரு படத்தின் 95 சதவீத படப்பிடிப்பு நடத்தி முடித்தது தமிழ் சினிமாவில் சமீபகாலத்து சாதனை என சொல்லலாம் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் அடுத்த வாரம் தொடங்கவுள்ளது.

இப்படத்தை ஏசியன் சினி கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் ஐஸ்வேர் வீ.சந்திரசாமி மற்றும் நல்லுச்சாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் இணைந்து தயாரித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top