மணிப்பூர் ஆளுநராக நஜ்மா ஹெப்துல்லா பதவியேற்பு

முன்னாள் மத்திய அமைச்சரான நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில ஆளுநராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

najma_heptullah2

மணிப்பூர் தலைநகரான இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஞாயிறுக்கிழமை காலை 11.30 மணியளவில் நஜ்மா ஹெப்துல்லாவுக்கு அந்த மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அவர், அந்த மாநிலத்தின் 18-ஆவது ஆளுநர் ஆவார். பதவியேற்பு விழாவில் மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபி, மாநில அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேகாலய ஆளுநரான வி.சண்முகநாதன் மணிப்பூர் மாநிலத்தையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு மாற்றாக மணிப்பூருக்கு நஜ்மா ஹெப்துல்லா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top