மறைந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலியின் பொருட்கள் ஏலம்!

மறைந்த குத்துச்சண்டை வீரர் முகமது அலி பயன்படுத்திய பொருட்கள், அவர் வென்ற பட்டைகள் நியூயார்க்கில் ஏலம் விடப்பட உள்ளன.

அமெரிக்காவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி கடந்த சில மாதங்களுக்கு முன் மறைந்தார்.

அவர் பல்வேறு போட்டிகளில் வென்ற இடுப்புப் பட்டைகள், பயன்படுத்திய கையுறைகள், ஆடைகள், அவர் கைப்பட எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொருட்கள் நியூயார்க்கில் ஏலம் விடப்பட உள்ளன.

இந்தப் பொருட்கள் இணைய தளம் மூலமே ஏலம் விடப்பட உள்ளன. உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இதனை ஏலம் எடுப்பதற்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தின் மூலம் பல லட்சம் அமெரிக்க டாலர் தொகை திரட்டப்படும் என ஏல நிறுவனத்தின் இயக்குநர் கேத்லீன் கஸ்மேன் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top