காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படை துப்பாக்கி சூடு: தாக்குதல் நடத்த கூடுதல் படைகள்.விரைவு

army4

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கர்னாஹ் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை முகாம் உள்ளது. இன்று இராணுவத்தினர்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அப்பகுதியில் மர்ம நபர்களால் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால்  சுட்டதாக சொல்லப்படுகிறது. பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த சண்டையில் பாதுகாப்பு படையின் மூன்று வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ முகாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கண்ணில் படுகிறவர்களை எல்லாம்  சுட்டுக்கொல்வதற்காக கூடுதல் படைகள் விரைந்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top