செய்யூர் தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு

201608200752000769_Cheyyur-constituency-DMK-MLA-win-against-case-high-court_SECVPF

சென்னை ஐகோர்ட்டில், திருப்போரூரை சேர்ந்த ஏ.முனுசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் சட்டசபை தனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.அரசு, 304 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதியில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுகளில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ணினால் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது. எனவே இந்த தொகுதியில் ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எம்.ஜோதிகுமார், ஏ.மனோஜ்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். இதையடுத்து, காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி (கலெக்டர்), தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு உள்ளிட்டோர் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top