தனியார் மருத்துவமனைக்கான வழிகாட்டி, நெறிமுறைகள் உள்ளனவா: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

201605261412071845_case-files-against-centre-medical-ordinance-in-supreme-court_SECVPF

தனியார் மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை மையங்களிலும், அவசர சிகிச்சை மையங்களிலும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளின் உறவினர்கள் தெரிந்து கொள்வது பற்றி ஏதேனும் வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளனவா என்று கேட்டு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசித் பரன் மண்டல் என்பவர், மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக தனது மருமகளை தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தார். ஆனால், அறுவை சிகிச்சை நடைபெற்ற மூன்று நாள்களுக்குப் பிறகு, மண்டலின் மருமகள் உயிரிழந்தார். மருத்துவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால், தனது மருமகளை காப்பாற்றியிருக்க முடியும் என்று மண்டல் நம்பினார்.

அதையடுத்து, பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் நிலவும் பொறுப்பின்மை குறித்து சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அறுவை சிகிச்சைகள் முடிந்த பிறகு நோயாளிகள் உடல்நலம் தேறுவது குறித்து தனியார் மருத்துவமனைகளில் அக்கறை காட்டப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் அசித் பரன் மண்டல் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

பொதுவாக, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகங்கள் தெரியப்படுத்துவதில்லை.

மருத்துவர்கள் அல்லது மருத்துவமனைகளின் பொறுப்பின்மையால் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்கள் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகி இழப்பீடு கோர முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இதுதொடர்பாக ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top