இந்திய ராணுவத்தால் காஷ்மீரில் கொல்லப்பட்ட கல்லூரி ஆசிரியர்

IMG-20160818-WA0007

காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய ராணுவம் நடத்திய சோதனையில் முப்பது வயது நிரம்பிய கல்லூரி ஆசிரியர் ஒருவர்  கொல்லப்பட்டு உள்ளார்.

தென் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கிரவ் என்கிற கிராமத்தில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் நடத்திய சோதனையின் போது, கைது செயப்பாட்டு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஷபீர் அஹமது மோங்கா என்கிற கல்லூரி ஆசிரியரும் ஒருவர்.

ஆனால், போலிஸ் தரப்பில் கிரவில் இருந்து இருவது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பாம்பர் அருகே ராணுவத்திற்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ஷபீர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஷாபிரது உடல் நேற்று அவரது குடும்பத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், அங்கு இருக்கும் மக்கள் ஷபீறது உடலில் பல்வேறு சித்தரவதை செய்யப்பட்டதற்கான தழும்புகள் இருப்பதாகவும், கைது செய்யப்பட்ட ஷபீர் அடித்தே கொல்லப்பட்டு இருக்கிறார் என்றும்  கூறுகின்றனர்.

பிரேத பரிசோதனை இன்னும் கிடைக்கவில்லை என்று கூறி மருத்துவமனையில் இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். ஷபீர் உடன் முப்பது பேர் அந்த சோதனையின் போது கைது செய்யப்பட்டு உள்ளனர். ஷபீருடைய இறுதிச் சடங்கில் மக்கள் பங்கேற்க கூடாது என்று கூறி அந்த பகுதியைச் சுற்றி கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஷபீருடன் சேர்த்து இதுவரை காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆகா உயர்ந்து உள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top