ரியோ ஒலிம்பிக்சில் மருந்தை பற்றி அறியாத மருத்துவர் இந்தியாவின் தலைமை மருத்துவ அதிகாரியாக சென்றிருக்கிறார்?

23127166

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும்  சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்ஸ் இந்த வருடம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் யாரும் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றும் இதற்கு விளையாட்டை ஊக்குவிக்காதது தான் காரணம் என்றும் பல்வேறு விவாதங்கள் நாடு முழுவதும், சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வந்தன.

தற்போது இந்திய அரசின், அதாவது மக்களது வரிப்பணத்தில் ரியோ ஒலிம்பிக்ஸ்க்கு, மந்திரிகளுக்கு நெருக்கமானவர்கள் சென்று எந்த வேலையும் செய்யாமல், இன்பச் சுற்றுலா சென்றது போல நடந்து கொள்வதாக பல புகார்கள் எழுந்துள்ளன.

அதில் மிக முக்கியமானவர் இந்தியாவின் தலைமை மருத்துவ அதிகாரி டோனி சிங். [Radiologist ] எக்ஸ்ரே -கதிரியக்க துறையச் சேர்ந்த டோனி சிங்கிற்கு விளையாட்டு மருந்துகளை பற்றி எதுவும் தெரியவில்லையாம். விளையாட்டு வீரர்கள் அவரை சென்று சந்தித்த போது, அனைவருக்கும் ‘காம்பி பிளேம்’ என்கிற சாதாரண  வலி நிவாரணி  மருந்தை பரிந்துரைத்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல், மூன்று மணியில் இருந்து குடிப்பது, நீச்சல் குளத்திலேயே எப்போதும் இருப்பது என்று ஒருவர் அவரது விடுமுறையில் என்ன செய்வாரோ அத்தனையையும் அவர் அங்கு செய்து வருகிறாராம். டோனி சிங் என்பவர் டர்லோகான் சிங்கின் மகன் ஆவார். அந்த டர்லோகான் சிங் தான் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணை தலைவர்!

இவரல்லாமல், இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கோயல் மீது, விளையாட்டு வீரர்களை கட்டாயப்படுத்தி புகைப்படங்களை, செல்பிக்களை எடுத்துக் கொள்வதாகவும், வீரர்களின் பெயர்களை தொடர்ந்து தவறாகவே (மாற்றி) சொல்லி வருவதாகவும்  தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்திய தேசிய துப்பாக்கிச் சங்கத்தின் தலைவர் யுவராஜ் ரனிந்தர் சிங், ரியோ ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர்களை நோக்கி வீசும் நிர்வாக அக்கறையின்மையின் முகங்களில் ஒருவராக, ரியோவில் செல்பி எடுத்து கொண்டாடி வருகிறார்.

இவருடன் துணைக்கு முன்னாள் ஹரியான முதல்வர் ஓ. பி சவுதாலாவின் மகன் அபே சவுதாலாவும் ரியோவில் இருக்கிறார். வெளிநாடு செல்வதற்கான முன் அனுமதியை நீதிபதியிடம் கூட அவர் வாங்கவில்லையாம்!

போதாத குறைக்கு தற்போது ஹரியானா அமைச்சர் அனில் விஜ்ஜூம் ஹரியானா விளையாட்டு வீரர்களை ‘ஊக்கப்படுத்த’ ரியோவிற்கு சென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top