அறைக்கு செல்ல கூட அனுமதி இல்லை; தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டம்

dmk

தமிழக சட்டப் பேரவையில் இருந்து நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள், அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஒரு வாரம் அவர்கள்அனைவரும் சஸ்பெண்ட் செய்யபட்டனர்.

இதையடுத்து, இன்று சட்டசபை கூடியது இன்று சட்டசபை வளாகத்துக்கு வந்த  தி.மு.க உறுப்பினர்களை அவை காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பேரவைக்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணமில்லை, ஆனால் எதிர்க்கட்சி அறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏக்கள் மா.சுப்ரமணியம், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக சட்டப்பேரவையின் 4-ஆம் எண் வாயில் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டசபைக்கு வந்த எதிர்க்கட்சி தலைவரான மு.க்.ஸ்டாலின், தனது அறைக்கு செல்ல அனுமதிக் கோரி பேரவை காவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தொடர்ந்து காவலர்கள் அனுமதிக்க மறுத்ததால் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top