இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் 60 படக்குழு

201608171335379934_Vijay-60-final-leg-shooting-in-chennai-OMR_SECVPF

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் தனது 60-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை தற்போது படக்குழுவினர் பழைய மகாபாலிபுரம் சாலையில் உள்ள ஒரு காலேஜில் நடத்தி வருகிறார்களாம்.

இந்த கடைசிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறார்களாம். இந்த படப்பிடிப்பு ஆகஸ்ட் 21-ந் தேதி வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளை படக்குழுவினர் மேற்கொள்ளவிருக்கின்றனர். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஆடுகளம் நரேன், டேனியல் பாலாஜி, ஒய்.ஜி.மகேந்திரன், ஜெகபதி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top