திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்: ஒரு வாரத்துக்கு இடைநீக்கம்

தமிழக சட்டப்பேரவையில் இருந்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து  அமளியில் ஈடுபட்டதால் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.
இதையடுத்து, அவைக் காவலர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினரை குண்டு கட்டாக வெளியேற்றினர்.

இந்த நிலையில், அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல்  அமளியில் ஈடுபட்ட 88 திமுக உறுப்பினர்களையும் ஒரு வாரத்துக்கு இடை நீக்கம் செய்து அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

திமுக உறுப்பினர்களை இடை நீக்கம் செய்ய நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்று சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top