நேபாளத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழப்பு.

நேபாளத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர்.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 85 பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று டோலால்காட் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு மலைப்பாதையில் பயணித்த பேருந்து நிலைத்தடுமாறி தீடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது.

150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் பேருந்து நிலைத்தடுமாறி கவிழ்ந்ததில் 33 பேர் உயிரிழந்ததாகவும், 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், விபத்தில் காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top