ஆந்திராவில்தொடர்ந்து தாக்கப்படும் தமிழர்கள் கண்டுகொள்ளாத அரசு

கடந்த ஆண்டு  20 தமிழர்கள் ஆந்திராவில் சுட்டுக்கொல்ல பட்டப்பின் அடிக்கடி செய்தி தாள்களில் செம்மரம் பறிமுதல் என்றும்  மரம் வெட்ட சென்றவர்கள் கைது என்றும் செய்திகளை வாசித்து கொண்டுதான் இருக்கிறோம். இரண்டு வாரங்களுக்கு முன் சேலம் தாராமங்கலத்தை சேர்ந்த  8  பேர்  திருப்பதிக்கு சென்றார்கள். அவர்களை கைது செய்த ஆந்திர காவல் துறை அவர்களை மரம் வெட்டதான் வந்தோம் என்று வாக்கு மூலம் கொடுக்க சொல்லி துன்புறுத்தியுள்ளது. கை காய்ப்பு படிந்து உள்ளது, காலில் செருப்பு இல்லை என்று காரணங்கள் சொல்லி அவர்களை ஒத்து கொள்ள முயற்சி செய்துள்ளது. அங்கே தற்செயலாக அந்த காவல் நிலையம் வந்த அவர்களது  ஊர்காரார் ஒருவர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு விடுதலையாகியுள்ளனர். இப்படியாக கோவிலுக்கு போகும் தமிழர்களையும் ,கூலி வேலைக்கு செல்லும் தமிழர்களையும் ஆந்திர போலீஸ் கைது செய்வதும் கேட்பாரற்ற  எளிய மக்கள் மீது வழக்கு போட்டு செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று சொல்லி சிறையில் அடைப்பதும் வழக்கம். அதனை தொடர்ந்து தற்பொழுது 32 பேர் ரேணிகுண்டா  ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யபட்டுள்ளனர்.

sen

தொடர்சியான இந்த கைது நடவடிக்கையில் கொலைகளிலும் பலியாவது பெரும்பாலும் வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மலை கிராமத்து மக்கள்தான். தற்பொழுது கைது செய்யப்பட்டு இருப்பவர்களில் 29 பேர் திருவண்ணாமலை மாவட்டமும் 2 பேர் வேலூர் மாவட்டமும் ஒருத்தர் சென்னையை சேர்ந்தவர் என்ற செய்தி குறிப்புகளை கொண்டு அந்த பகுதிக்கு நேரில் சென்றோம்.

வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சாலையில் போளூருக்கு முன் இருக்கிறது சந்தகடைவாசல் என்னும் ஊர். சந்தகடைவாசல் முக்கிய சாலையில் இருந்து 7 கி. மி  தொலைவில் படவேடு என்னும் ஊர் இருக்கிறது. இங்கு இருக்கும் ரேணுகா அம்மன் கோவில் அந்த பகுதியில் பிரபலமான கோவிலாக  இருக்கிறதால்  மக்கள் அதிக அளவு வந்து செல்கிறார்கள். ஆரணியில் இருந்து படவேடுக்கு பேருந்தும் இருக்கிறது. சந்த கடவாசலில் இருந்து சேர் ஆட்டோக்கள் இங்கு இயக்கப்படுகின்றன. ஏற்கனவே சுட்டுகொல்லப்பட்ட 20 பேரில் 7 பேர்  படவேட்டை சேர்ந்தவர்கள். படவேடு மலை அடிவாரத்தில் இருக்கும் விவசாய கிராமம். இங்கு  செண்பக தோப்பு அணையில் இருந்து வரும் தண்ணீரை நம்பி  விவசாயம்  செய்கிறார்கள்.  செண்பகதொப்பு அணை மொத்தம் 30 கிராமங்களில் 6693 ஏக்கர் நிலத்தில் நீர்  பாய்கிறது. வாழை மற்றும் கரும்பு விவசாயம் இருந்தாலும் இது ஒட்டு மொத்த கிராமதிற்கும் போதுமானதாக  இல்லை.

RT

படவெட்டை சுற்றி சாம்ந்திபுரம்  ராமநாதபுரம்  என சில கிராமங்களும்  சென்பகத்தொப்பு அணையை  நம்பி உள்ளனர். குறைந்தளவு விவசாயம் நிலம் இருக்கும் இந்த பகுதியில் நிலமற்ற கூலி தொழிலாளர்கள், மலையில் இருந்து இறங்கியவர்கள் என்று வாழ்வாதாரத்திற்கு போராட கூடியவர்கள எண்னிக்கை சற்று அதிகமாகவே இருக்கிறது. அவர்கள் கேரளாவில் உள்ள எஸ்டேட்களுக்கு  மற்றும் சென்னையில் கூலி தொழிலாளியாக, போர்வெல் வண்டிகளில் என பல தரப்பட்டவேலையில் ஈடுபடுகிறார்கள்.

இதற்கு முன் சுட்டு கொல்லப்பட்டவர்களும் கைது செய்து  விடுதலை செய்யப்பட்டவர்கள் தான் இந்த பகுதியை சேர்ந்தவர்கள். தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரும் ஜவ்வாது மலையில் இருக்கும் ஜமுனாமரத்துர் மற்றும் சென்பகதோப்பை  சார்ந்தவர்கள். மொத்தமாக  ஜவ்வாது மலையில் 272  மலை கிராமங்கள் இருகின்றன இந்த பகுதியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வரை ஜவ்வாது மலையில் சாலை வசதி உள்ளது. ஆனால் ஜமுனாமரத்துர் தவிர  பல கிராமங்கள இந்த சாலையில் இருந்து துண்டிக்கப்பட்டதுதான். இந்த மலை முன்னர் சந்தன மரங்கள் நிறைந்ததாகவும் வளமானதாக  இருந்ததாகவும் அந்த பகுதி மக்கள் தங்கள் நினைவில் உள்ளதையும்  முன்னோர் கதைகள் மூலமும் தெரிவிகின்றனர்.

26

இந்த மலையில் உள்ள சென்பகதொப்பு  ஊரை சேர்ந்த  15 பேரை தான் இப்பொழுது ஆந்திர அரசு கைது செய்துள்ளது. சென்பகதொப்பு என்பது படவெட்டில் இருந்து மலையில் ஏறும் போது முதல் கிராமம் இந்த மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு படவேட்டிற்குதான் வர வேண்டும் இதில் கீழ் சென்பகதோப்பை  சேர்ந்தவர்கள் அப்பாசாமி,கதிரேசன்,ரமேஸ்,சங்கர்,அன்பழகன் சுப்ரமணி,முருகேசன் ஆகிய எழுபேராகும். மற்றவர்கள் மேல் செண்பகதோப்பை சேர்ந்தவர்கள்.
22    கைதுசெய்யப்பட்ட ரமேசின் குழந்தைகள்

கீழ் செண்பகதொப்பு மிக சிறிய கிராமம் இங்கு கம்பு,சோளம், திணை போன்ற பயிர்கள் விவசாயங்கள் நடை பெறுகிறது. ஆறு மாதம் விவசாயமும் மீதி ஆறு மாதம் கேரளாவில் உள்ள ரப்பர் தோட்டங்கள், எஸ்டேட்களுக்கு  குடும்பத்துடன் வேலைக்கு செல்கிறார்கள் தேக்கு போன்ற மரங்கள் வெட்டவும் போர்வெல் தொழிலாளர்களாகவும் பணிக்கு செல்கிறார்கள். ஆந்தராவில் உள்ள மலைகளில் தேக்கு மரங்கள் வெட்ட, பண்ணை வேலைக்கு என்றும்,   பல்வேறு வேலைகளுக்கு அழைத்து செல்லும் ஏஜண்ட்கள் இவர்களை காடுகளில் மரங்கள் வெட்டும் வேலைக்கு அரசு அனுமதியுடன் தான் அழைத்து செல்கிறோம் என்று போலி சான்றிதல்கள் எல்லாம் காட்டி அழைத்து சென்று இறுதியில் கைது செய்யபடும் போது கைவிடுவதாகவும் அந்த மக்கள் தெரிவிக்கிறார்கள் . வேலைக்கு அழைத்து செல்லும் இடங்களில் முறையான உணவு, குடிநீர் போன்றவை கூட இவர்களுக்கு வழங்கபடுவது இல்லை என்றும் கூறுகிறார்கள்.

பெரும்பாலும் இந்த  ஏஜண்ட்கள் அதிகமாக  மலைகிராமத்து மக்களை இந்த பணிக்கு  தேர்ந்து எடுக்க முக்கிய காரணம் இவர்களுக்கு வெளியுலக தொடர்பு  அதிகம் இல்லை என்பதும், இவர்களை மலை பிரேதேச பகுதிகளில் கடுமையா உழைக்க கூடியவர்கள். பத்து மணி நேரத்துக்கும் அதிகமாக  தண்ணீர் கூட குடிக்காமல் இவர்கள் வேலை செய்வார்கள், மாடு போல இவர்களை வேலை வாங்கலாம் என்பதால்தான் இவர்களை தேர்ந்தெடுப்பதாக சந்த கடவாசலில் ஆட்டோ  ஓட்டும் அம்பேத்கர் மக்கள் இயக்க தோழர் தெரிவித்தார்.

மரம் வெட்டுவதற்கு என்று அழைத்து செல்லப்பட்டவர்கள் செம்மரம் வெட்டியதாக  கைது செய்யப்படுவது ஒரு பக்கம் என்றால் இந்த பகுதியில் இருந்து தோட்ட  தொழிலுக்கு, கோவிலுக்கு போர்வெல் வேலைக்கு என்று பல பணிகளுக்கு அழைத்து செல்லப்படும் இந்த கிராமத்து ஆண்கள்  ஆந்திர அரசால் கைது செய்யப்படுகிறார்கள்.

நாம் சென்ற போது அந்த கிராமமே சோகத்தில் இருந்தது. அதிகபட்சமாக 40  குடும்பங்களே உள்ள ஒரு கிராமத்தில் 7 பேர் கைது செய்யபடுவது  என்பது பெரும் சோகம் தான்.

அவர்கள் கைது செய்யப்பட மறுநாள் ஆந்திராவிற்கு அவர்கள் குடும்பத்தினர் சென்று உள்ளனர். ஒரு வார.காலமாக அவர்கள் தங்கள் கணவர்களை மீட்க மொழிதெரியாத ஊரில் போராடி கொண்டிருகிறார்கள். குழந்தைகளை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அல்லது தனியாகவோ  விட்டு சென்றுள்ளனர். அன்பழகன் என்பவரது 10 வயது மகள் அகிலா  தங்கள் குடிசையில் ஒருவாரமாக  தனியாக  வாழ்ந்து வருகிறார்.

 

23                                                               ரமேசின் மனைவியின் தாய்

இவர்கள் கடுமையான உடல் உழைப்பை  நம்பி மட்டுமே தன் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்கள். இவர்கள் கை கால் காய் காய்ப்பு பிடித்து இருப்பது இவர்கள் மரம் வெட்டுபவர்கள் என்று  கைது செய்ய காரணத்தை ஆந்திர அரசு சொல்லுகிறது.

தமிழக  உழைக்கும்  மக்கள் எல்லோரையும் குற்ற பரம்பரையாக  அடையாளம் காட்டுகிறது ஆந்திர அரசு. தங்களுக்கு என்று எந்த பின்னனியும் இல்லாத அப்பாவிகள்தான் இதில் பலிகொடுக்க படுகிறார்கள். இது தொடரும் பட்சத்தில் தமிழக விவசாய கிராமங்களில் இருந்து திருப்பதிக்கு செல்லும் யாரை வேண்டுமானாலும் ஆந்திர அரசு கைது செய்ய முடியும்.  ஒரு பழங்குடிகளை குற்றபரம்பரையாக  அடையாளம் காட்டும் இந்த  சதியை  முறியடிக்க வேண்டியது நமது கடமையாகும்.தமிழக அரசும் இந்த எளிய மக்களுக்கு பாதுகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும்

ஆந்திராவில் செம்மர கடத்தலில் சிக்குபவர்கள் மீது உடனடியாக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்.

தொடர்ந்து செம்மர வழக்குகள் பாயும் பட்சத்தில் குற்றவாளிக்கு ரூ.10 லட்சம் அபராதமும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். முதற்கட்டமாக ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்குகள் பதிவு செய்யப்படும் என ஆந்திர அரசின் வனப்பிரிவு சட்டத்தில் புதிதாக திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இப்போது கைதாகி உள்ள 32 தமிழர்கள் மீது ஜாமீன் கிடைக்காத வகையில் 6 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த விவகாரத்தில் கைதான 32 தமிழர்களை ஜாமீனில் எடுப்பதற்கு தேவையான சட்ட உதவிகளை செய்வதற்காக தமிழக அரசின் சிறப்பு வக்கீல்கள் முகமது ரியாஸ் மற்றும் அருள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி, செம்மரக்கடத்தலை தடுக்க ஆந்திர மாநில வனத்துறை சட்ட பிரிவுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு மே 15-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 32 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவிட்டு ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, தமிழக அரசின் வக்கீல்கள் சித்தூர் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்கான சட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசின் ஆலோசனை படி வக்கீல்கள் மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அன்பழகன் என்பவரது மகள் அகிலா தனது தந்தையை  தமிழக அரசு மீட்டுத் தரவேண்டுமென்று முன்வைத்த உருக்கமான வேண்டுகோள். (காணோளி)

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top