பாடலாசிரியர் நா. முத்துக்குமார் திடீர் மரணம்

08_MP_MUTHUKUMAR_1355982g

மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த பிரபல திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமார் இன்று காலை 10 மணிக்கு உயிரிழந்தார்.

அவரது உடல் அவரது முகப்பேர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர், பொதுமக்கள்  மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான நா. முத்துக்குமார், இயக்குனர் சீமான் இயக்கிய வீர நடை படம் மூலமாக அறிமுகமானவர். தெய்வமகள் படத்தில் வரும் ஆரிரோ ஆராரிரோ, தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் போன்ற பல்வேறு எதார்த்தமாக இலக்கியமாக பாடல்களை மக்களுக்கு கொண்டு சேர்த்தவர்.

அவரது இந்த மரணம் தமிழ் சினிமா துறையினர் மட்டுமல்லாமல், அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top