அமெரிக்காவின் விமான நிலையத்தில் குடியேற்ற துறை அதிகாரிகள் ஷாரூக்கானுக்கு தடுப்புக் காவல்

sharuk

பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் விமான நிலையத்தில் குடியேற்ற துறை அதிகாரிகள் தடுப்புக் காவலில் வைத்தனர்.

இது தொடர்பாக ஷாரூக்கான் அவரது ட்விட்டர் பக்கத்தில், “உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நான் தலை வணங்குகிறேன். அவற்றை மதிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறை நான் அமெரிக்கா செல்லும்போதும் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளால் தடுப்புக் காவலில் வைப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது” என பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து பதிவிட்ட மற்றொரு ட்வீட்டில், “அலுவலகத்தில் காத்திருந்த நேரத்தில் சில போக்கிமான்கள்” சிக்கின என பதிவு செய்துள்ளார்.

நடிகர் ஷாரூக்கான் இதுபோல் அமெரிக்காவில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவது முதல் முறை அல்ல. கடந்த 2012-ல் நியூயார்க் விமான நிலையத்திலும், 2009-ல் நியூ ஜெர்சி விமான நிலையத்திலும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top