நெல்லை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு!

child-rescueநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

பத்திரமாக மீட்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு, முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக குழந்தை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பத்திரமாக குழந்தை மீட்கப்பட்டதை அடுத்து பொதுக்கள், மீட்புக்குழுவினர் மகிழ்ச்சியாகியுள்ளனர்.

சங்கரன்கோவிலை அடுத்த குத்தாலப்பேரியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் 3 வயது குழந்தை ஹர்ஷன், இன்று காலை 10.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தந்தையுடன் தோட்டத்திற்குச் சென்றிருந்த போது, இந்த துயர சம்பவம் நேரிட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், மீட்புப் பணியைத் தொடங்கினர். சுமார் 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள், 15 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்தது.

இந்நிலையில் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு எந்திரம் மூலம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, மீட்புப் பணிகளை நேரில் கண்காணித்த மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top