சிலை திருட்டு வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தீனதயாளன் ஆஜர்

201608111634219831_statue-theft-case-Tinatayalan-appear-srivilliputhur-court_SECVPF

நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்தில் உள்ள நாறும்பூ நாதர் கோவிலில் இருந்து கடந்த 2005-ம் ஆண்டு நடராஜர், சிவகாமி அம்பாள், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 13 சுவாமி சிலைகள் திருடு போனது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, சென்னையில் சிலை திருட்டு வழக்கில் கைதான தீனதயாளன் உள்ளிட்ட 8 பேர் பழவூர் கோவிலில் சிலை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து தீனதயாளன் உள்ளிட்ட 8 பேர் மீது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதி மன்றம் மற்றும் சிலை திருட்டு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி வசந்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தொடர்புடைய தீனதயாளன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணைக்கு பின் செப்டம்பர் 14-ந் தேதி வழக்கை ஓத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top