ரெயிலில் கொள்ளை: வங்கி அதிகாரிகள் உடந்தை?

201608111235515707_bank-staffs-also-under-investigates-over-train-robbery_SECVPF

சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் வங்கிப் பணம் ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

தமிழகத்தில் இது போன்று நடந்திராத இந்த கொள்ளை சம்பவம் போலீஸ் -பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்-விருத்தாசலம் இடையே பணம் கொள்ளை போயிருக்கலாம் என்று போலீசார் கருதுவதால் ரெயில்வே பாதுகாப்பு படையின் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் விருத் தாசலம்-சேலம் இடை யேயான வழித்தடத்தில் டிராலியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுப்பணியில் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் ஏதும் சிக்கவில்லை.

இந்த நிலையில் ரெயில்வே பாதுகாப்பு படையின் திருச்சி கோட்ட ஆணையர் செந்தில்குமரேசன் விருத்தாசலம் ரெயில் நிலையம் வந்தார்.

அங்கு அவர் பணம் கொள்ளைபோன ரெயில் நிறுத்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். மேலும் அப்போது பணியில் இருந்தவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினார்.

பின்னர் விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்துக்கு சென்று போலீசாரிடம் கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

திருச்சி கோட்ட போலீசார் சம்பவ நாளன்று அவர்கள் பணியை செவ்வனே செய்துள்ளனர். விருத்தாசலம் போலீசார் ரெயில் வந்தவுடன் வழக்கமாக பணிகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது எந்தவிதமான சம்பவங்களும் நடக்க வில்லை என கூறுகிறார்கள்.

மராட்டியம், பீகார், மேற்குவங்காளம், மற்றும் தென்மாவட்டப்பகுதிகளில் தான் ஏலக்காய் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லும்போது ரெயில் கழிவறையை உடைத்து கொள்ளையடித்து செல்வார்கள். ஆனால் பணம் திருடுவது இப்போது தான் நடந்துள்ளது.

விருத்தாசலத்திற்கு அடுத்து விழுப்புரத்தில்தான் ரெயில் நின்றது. விருத்தாசலம் மற்றும் விழுப்புரத்தில் ரெயில் நின்ற போது பணம் இருந்த ரெயில் பெட்டியின் சீல் உடைக்கப்படவில்லை என்பதை போலீசார் உறுதிசெய்துள்ளனர்.

மேலும் இந்தவழித் தடத்தில் கொள்ளை நடக்க வாய்ப்பில்லை. சேலத்தில் புறப்படுவதற்கு முன் நடந்திருக்கலாம். அல்லது சேலம்-விருத்தாசலம் இடையில் நடந்திருக்கலாம். ஆனால் விருத்தாசலத்தில் இருந்து சென்னை வரை மின்கம்பிகள் செல்வதால் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் சென்னைக்கு ரெயில் காலை 3.30 மணிக்கு சென்று சேர்ந்து விட்டதால் அங்கு நடந்திருக்க அதிகம் வாய்ப்புள்ளது.

இந்த ரெயிலில் பணம் கொண்டு செல்லப்படுகிறது என்று வங்கி அதிகாரிகள் மற்றும் பணத்தை பார்சல் செய்து அனுப்பும் தனியார் நிறுவனத்தினர் தகவல் தெரிவிக்காமல் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளை சம்பவத்தில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழி யர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top