6 புதிய ஐ.ஐ.டி.கல்வி நிறுவனங்கள் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல்

201608112025309026_Prez-nod-for-six-new-IITs-in-country-NIT-in-AP_SECVPF

பாலக்காடு, ஜம்மு, திருப்பதி, தார்வார், பிலாய் மற்றும் கோவா  உள்ளிட்ட 6 இடங்களில் புதிய ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்திருந்தது.

தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான மசோதாவில் மத்திய அரசு சமீபத்தில் புதிய திருத்தம் கொண்டுவந்தது. மத்திய அரசு கொண்டுவந்த தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட மசோதாவிற்கு ஜூலை 25 ம் தேதி மக்களவையும், ஆகஸ்ட் 2ம் தேதி மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புதிய மசோதாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்தார்.

ஜனாதிபதியின் ஒப்புதலைத் தொடர்ந்து 6 இடங்களில் கல்வி நிறுவனம் தொடங்குவது உறுதியாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top