சீனாவில் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 21 பேர் பலி

201608112013470700_21-killed-in-explosion-at-power-plant-in-China_SECVPF

மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையமொன்றில் உயர் அழுத்த நீராவி குழாய் இன்று வெடித்தது. இதில் 21 பேர் பலியாகினர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து பிற்பகல் 3:20 மணியளவில் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தோரில் மூன்று பேரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top