தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,அனுதாபம் வேண்டாம்;மாயாவதி

mayavathi

பசு பாதுகாப்பு என்ற பேரில், தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் நேற்று பேசிய மாயாவதி, ‘ஆந்திராவில் அண்மையில் 2 தலித்துகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். தலித்துகள் தாக்கப்படுவது குறித்து, அனுதாபம் மட்டும் தெரிவித்தால் போதாது.

பசு பாதுகாப்பு என்ற பேரின் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு, குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி இதனை அவசியம் பரிசீலிக்க வேண்டும்’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top