தென்மேற்கு பருவமழை இந்த வருடம் 10 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

201608110749537506_This-year-received-more-than-10-percent-of-southwest-monsoon_SECVPF

இந்தியாவில் தமிழ்நாடு தவிர பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தான் அதிக அளவில் பெய்யும். 75 சதவீத பகுதிகள் மழையை பெறுகின்றன. அதன்படி வடமாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தென் மேற்குபருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பை உள்ளிட்ட நகரங்களில் கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் 32 செ.மீ. மழையை மட்டும் சராசரியாக கொடுக்கக்கூடிய தென் மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது.

வானிலை குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை காலம் முழுவதும் 376.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது சராசரி மழையை விட 20 சதவீதம் அதிகம்.

2011-ம் ஆண்டு 298.9 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. அது சராசரியை விட 6 சதவீதம் குறைவு.

2012-ம் ஆண்டு 243.5 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது சராசரியை விட 23 சதவீதம் குறைந்தது.

2014-ம் ஆண்டு 321.5 மில்லி மீட்டர் மழை பெய்து சராசரியை விட 1 சதவீதம் அதிகரித்துள்ளது.

2015-ம் ஆண்டு 285.8 மில்லி மீட்டர் மழை பெய்து, சராசரியை விட 10 சதவீதம் குறைந்துள்ளது.

2016-ம் ஆண்டு இதுவரை 152 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது 10 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. அதாவது இதுவரை சராசரியாக 137 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும்.

கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய தமிழ்நாட்டில் சராசரி மழையாக 320 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். அதற்கு இன்னும் 50 நாட்கள் உள்ளன.

இன்று (வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்யும். இந்த வானிலை 5 நாட்களுக்கு நிலவும். அதாவது இதே வானிலைதான் நீடிக்கும்.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top