லோக்பால் சட்டத்தில் திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

201608110841474979_Cabinet-gives-ex-post-facto-approval-to-changes-in-Lokpal_SECVPF

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அச்சட்டத்தின் 44-வது பிரிவு குறித்து அரசு ஊழியர்களில் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களும் கவலை தெரிவித்திருந்தனர். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசுப்படியும் இந்த திருத்தம் செய்யப்படுகிறது. திருத்தம் செய்யப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

பேறுகால விடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு காலஅளவு, 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்படும். வளர்ப்புத் தாய்க்கும் 12 வார விடுப்பு அளிக்கப்படும். 10 மற்றும் அதற்கு மேற்பட்டோர் பணியாற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் இச்சலுகை பொருந்தும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top