அப்துல் கலாமுக்கு சிலை வைக்க தமிழக சட்டப்பேரவையில் இஸ்லாமிய கட்சிகள் எதிர்ப்பு

tn govern

மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சட்டப்பேரவையில் பள்ளி -உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. அப்போது, அப்துல் கலாமுக்கு சிலை வைப்பது தொடர்பாக நடந்த விவாதம்:

அபுபக்கர் (முஸ்லிம் லீக்): இஸ்லாம் மார்க்கப்படி சிலை வழிபாடு கூடாது. எனவே, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை வைப்பதைத் தவிர்த்து, தமிழக அரசு வழங்கியது போன்று விருது போன்றவற்றை அளிக்க வேண்டும்.

அமைச்சர் எம்.மணிகண்டன்: அப்துல் கலாம் பெயரில் விருதுடன், ரூ.5 லட்சத்தையும் அளித்து, அவரது பிறந்த நாளை இளைஞர் எழுச்சி தினமாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அவரது நினைவிடத்துக்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

அப்துல் கலாம் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கிய சிந்தனையாளர். எனவே, அவரை குறிப்பிட்ட சமுதாயத்துக்கு உட்பட்டவராகக் கருதக்கூடாது. சிலை வைப்பதை எதிர்க்கக்கூடாது என்றார்.

அபுபக்கரைத் தொடர்ந்து, கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது மனிதநேய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் தமிமுன் அன்சாரி பேசினார். அவரும், அப்துல் கலாமுக்கு சிலை வழிபாடு கூடாது என்ற கருத்தை வலியுறுத்திப் பேசினார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக அவர் மேலும் கருத்தைத் தெரிவிக்க பேரவைத் தலைவர் பி.தனபால் அனுமதி மறுத்தார். அதன் பின் அவர் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top