சேலத்திலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ரெயிலில் கொள்ளைப்போனது ரூ.5 கோடியே 78 லட்சம்

201608101046583185_Salem-to-Chennai-train-rs-5-crore-78-lakh-robbery_SECVPF (1)

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் எடுத்து சென்ற ரிசர்வ் வங்கியின் பணம் கொள்ளைப்போனது. ரெயிலில் எடுத்து சென்ற பணப்பெட்டிகளில் 4 பெட்டிகள் மட்டுமே திருடர்கள் திருடி சென்றுள்ளனர். இதில் ஒரு பெட்டியில் ரூ.4 கோடியும், மற்றொரு பெட்டியில் ஒன்னேமுக்கால் கோடியும், மற்றொரு பெட்டியில் 3 லட்சமும், இன்னொரு பெட்டியில் 530 ரூபாயும் இருந்துள்ளது. மொத்தம் ரூ.5கோடியே 78லட்சத்து 530 திருட்டு போய் உள்ளதாக சேலத்தில் போலீசார் தெரிவித்தனர்.

இந்த ரூபாய் நோட்டுக்கள் எண்கள் எது எது என வங்கி அதிகாரிகள் தனிப்படை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். திருட்டு போன பணத்தை திருடர்கள் எங்கும் மாற்றும் போது கையும் களவுமாக பிடிக்கவும் தனிப்படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top