புதிய கல்வி கொள்கை- சமஸ்கிருதம், இந்தி மொழியை திணிக்க அனுமதிக்க மாட்டோம்: சட்டசபையில் அமைச்சர்

சட்டசபையில் இன்று உயர்கல்வி, பள்ளி கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தங்கம் தென்னரசு (தி.மு.க.) பேசிதாவது:-

மத்திய அரசு ஒரு புதிய கல்வி கொள்கை வரையறை வெளியிட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழு வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் வெளியிட்டுள்ளது.

nomination-begins-for-Tamilnadu-Assembly-polls_SECVPF

இந்தியாவில் இதுவரை பல்வேறு கல்வி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது கல்வியாளர்கள் கொண்ட குழுவாக இருக்கிறது. ஆனால் இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை நாடு முழுவதும் விவாத பொருளாக மாறி உள்ளது. மு.க.ஸ்டாலின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்.

எனவே இந்த கல்வி கொள்கை மாநில அரசின் உரிமையை பறிப்பதாக அமைந்துள்ளது.

அமைச்சர் கே.பி.அன்பழகன்:- மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து மாநில அரசிடம் மத்திய அரசு கருத்து கேட்டு உள்ளது. புதிய கல்வி கொள்கையின் சில உள்ளீடுகள் மட்டும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. முதல்-அமைச்சர் அம்மாவின் அரசு இதற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அனுப்பும்.

இதில் தமிழகத்தின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். நமது மொழி, கலாச்சாரம் தன்மை பாதுகாக்கப்படுவதை அம்மா அரசு உறுதி செய்யும்.

தற்போது சமஸ்கிருதம், இந்தி மொழியை திணிக்க எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டோம். சிறுபான்மையினர் நலன் காக்கப்படும்.

அமைச்சர் பெஞ்சமின்:- நானும் இதே கருத்தை பதிவு செய்கிறேன். மாநில மொழி, கலாச்சார தொன்மை பாதுகாக்கப்படும்.

தங்கம் தென்னரசு:- புதிய கல்வி கொள்கைக்காக மத்திய அரசு இந்தியா முழுவதும் 2 லட்சம் பேரிடம் கருத்து கேட்டதாக சொல்லி இருக்கிறது. எனவே தமிழகத்தின் கருத்துகளை சொல்லி இருக்கிறீர்களா? என்பதை அறிய விரும்புகிறேன். நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பது நமது பன்முகத்தன்மையை பாதிக்கும்.

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஒரே தேர்வு முறை என்பதும் மாநில உரிமையை பாதிக்கும். கிராமபுற மாணவர்களை வெகுவாக பாதிக்கும். சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.  இதற்கு அமைச்சர் விரிவாக பதில் அளித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top