சிறிய படங்களை வசூல் ரீதியாக பெரிய படமாக்க வேண்டும்: சொல்கிறார் விஜய் சேதுபதி!

vijay sethupathiவிஜய்சேதுபதிக்குள் இருந்த தயாரிப்பாளர் தற்போது ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படம் மூலம் வெளியே வந்திருக்கிறார்.

இந்த படத்தில் தான் ஒரு தயாரிப்பாளராக மட்டுமே செயல்படும் விஜயசேதுபதி, தான் நடித்த ‘சூதுகவ்வும்’ படத்தில் நடித்த ரமேஷ் திலக்கை நாயகனாக்கியுள்ளார். அதோடு, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் நடித்த பாலா மற்றும் அப்பட இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோருக்கு இப்படத்தில் வாய்ப்புக் கொடுத்துள்ளார்.

இதுபற்றி விஜயசேதுபதி கூறுகையில், சின்ன படங்களை வசூல் ரீதியாக பெரிய படமாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அந்த அடிப்படையில்தான் சிறிய கலைஞர்களை வைத்து இப்படத்தை எடுக்கிறேன்.

இப்படம் காமெடி என்றாலும் இதுவரை சொல்லப்படாத புதுமையான முறையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குழந்தைகளை மனதில் கொண்டே கதையும், காட்சிகளும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லும் அவர், நான் நடிக்கிற படங்களில் எப்படி படம் பார்ப்பவர்களின் மனதை பாதிக்கும் வன்முறை காட்சிகள் இடம்பெறுவதில்லையோ அதேபோல் நான் தயாரிக்கிற படங்களிலும் வன்முறை காட்சிகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top