என் மகனுக்கு வந்த நிலை வேறு மாணவர்களுக்கு வரக் கூடாது மதுரையில் தற்கொலை செய்த லெனினின் தந்தை

கடந்த  ஜூலையில் தமிழகத்தையே  இரண்டு மரணங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மதுரை மருத்துவகல்லுரியில் மருத்துவம்ம் படித்து உயற்படிப்புக்காக நுழைவுத்தேர்வு எழுதி டெல்லி  AIIMS சேர்ந்த பதினைந்து நாளில் மர்மமான  முறையில் இறந்து போன சரவணின் மரணமும் வங்கி கடன் வாங்கி  பொறியியல்  படித்து   வேலைகிடைக்காததால்  கடன் அடைக்க முடியாமல் வங்கி வசூல் ஆட்கள் கொடுத்த தொல்லையால்  தற்கொலை செய்து கொண்ட மதுரை மாணவன் லெனின்  மரணமும்  தமிழகத்தில் கல்வியில் மாணவர் நலன் என  சிந்திப்பவர்களையும் தாண்டி பொதுமக்களையும்  சற்று கலக்கமுறச்  செய்தது.

pom

லெனின் மரணம் தொடர்பாக   என்ன தான் நடந்தது என் தெரிந்துகொள்ள  மதுரை தெப்ப குளத்தை அடுத்துள்ள அனுப்பானடிக்கு   சென்று  அங்கு உள்ள தமிழ் மாணவர்  இயக்கத்தை சேர்ந்த தோழர்  கிட்டுவுடன் லெனின் வீட்டிற்கு சென்றோம்.

லெனின் தந்தை கதிரேசன் கட்டிட வேலைக்கு  செல்லும் தினக்கூலி அவரது அம்மா  ஆரிய மாலா குடும்பத்தலைவி அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் கடந்த  2010 ஆண்டு  முதல் 2014  வரை  லெனின் அழகர் கோவில் உள்ள  பொறியியல் கல்லுரியில் சிவில் இஞ்சினியரிங் படித்து வந்துள்ளார்.  பொறியியல் படிப்பிற்கான கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கியின் அம்மன் சன்னதி கிளையில் 190000 ருபாய் கடனாக  வாங்கி இருக்கிறார்.

பெற்றோரின் ஆண்டுவருமானம் 450000 ருபாய்க்கு குறைவாக  இருந்தால் படிப்பு காலம் மற்றும் அதன் பின் ஒராண்டிற்கு வட்டி கிடையாது அதனை மத்திய  அரசே  செலுத்தும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கடன் கட்ட சொல்லி தொடர்பு கொண்டவர்கள் 2,48,623 உடனே கட்ட சொல்லி மீண்டும் மீண்டும் கட்ட சொல்லி தொந்தரவு செய்து இருக்கிறார்கள் எந்த  வகையில்; இத்தனை பெரிய தொகை வந்தது என்றும் யாரும் கேள்வி கேட்கவில்லை 2015 ஆம்  ஆண்டு ஜூன் வரை லெனின் வாங்கிய கடனுக்கு வட்டி கிடையாது அதன் பின் வந்த ஓரு  ஆண்டுக்குள் 2,48,623 எப்படி வந்தது  என்று முதலில் நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது.  மொத்த  தொகையையும் பதினைந்து  நாட்களுக்குள் கட்ட சொல்லி  தினமும் கேட்டு தொல்லை  கொடுத்துள்ளனர் ஒரு கட்டத்தில் வீட்டை  வித்தாவது கட்டி தீர்த்து விட வேண்டும் என்ற முடிவிற்கு  லெனின் தந்தை  வந்து இருக்கிறார். அதற்குள் வசூலிப்பவர்களின் தொந்தரவு அதிகமாக பெற்றோருக்கும் நம்மால் பெரு  பிரச்சனைதான் என்று எண்ணிய  லெனின் இறந்து போய் உள்ளார்.

931

லெனின் தந்தை கதிரேசன்  பேசிய போது  சில நாட்களுக்கு முன் ஒரு போன் வந்தது லெனினா  என்று கேட்டார்கள் ஆமா   எங்க  பையந்தான் சொல்லுங்க  என்றேன்,  உங்க மகன்  லோன் வாங்கிருக்காரு நீங்க உடனே  கட்டனும்   என்று  சொன்னார்கள் ஆமா சார் இன்னும்  வேலை கிடைக்கல  கிடைச்சதும் கெட்டிருவாப்புல என்று  சொன்னேன் அதற்கு    சீக்கிரம் கட்டுங்க  என்று சொன்னார்கள்.   அடுத்த சில நாட்களிலேயே  மீண்டும் ஒரு போன்  வந்துச்சு  அப்பொழுதும் சீக்கிரம் கட்ட சொல்லி கேட்டார்கள், அடுத்த நாள்  போன் வரும் போது லெனினும் கூட இருந்தான்.  அப்போ  நான் உங்களுக்கு பாரமா இருக்கேன் என்ன  பெத்தது புரோசனம் இல்லாமல்  போச்சு  என்று  பேசினான் இல்லப்பா  நீ கவலைபடாத  நாம பாத்து கட்டிரலாம் என்றேன்.திரும்பவும்  எப்போ  கெட்ட போறிங்க என்று வங்கியிலிருந்து கேட்டனர். அன்று ஒரு லட்டர்  ஒன்னும் அனுப்பிருக்காங்க  என்று லெனின் சொன்னான்.  பின்  இரவு  எல்லோரிடமும் நல்லா  பேசிவிட்டு சாப்பிட்டு சென்றவன்  காலையில் தற்கொலை செய்து கொண்டான்.  என் மகனுக்கு எற்பட்ட இந்த நிலை  வேறு எந்த பிள்ளைக்கும் வரகூடாது.  எங்களை போல  வேறு எந்த பெற்றோரும் இழந்து விட கூடாது  இந்த அரசாங்கம் இந்த  வங்கி கடன் தொல்லைக்கு  ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.  என்றார்

ஒரு கட்டத்தில் வீட்டை  வித்தாவது கட்டி தீர்த்து விட வேண்டும் என்ற முடிவிற்கு  லெனின் தந்தை  வந்து இருக்கிறார். அதற்குள் வசூலிப்பவர்களின் தொந்தரவு அதிகமாக பெற்றோருக்கும் நம்மால் பிரச்சனைதான் என்று எண்ணிய  லெனின் இறந்து போய் உள்ளார்.

நாங்க  கடன் வாங்கியது  அம்மன் சன்னதி பேங்ல,  அவங்கதான்  கடன  கேட்கணும், கெட்ட சொல்லனும்,ஆனால்  யார் யாரோ போன் பன்னி கேக்குறாங்க.  கந்து  வட்டி காரார்களை  விட மோசமானவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்று லெனின் சித்தப்பா  கூறினார்.  ஸ்டேட் வங்கி தனது  கல்வி கடன் வசூல் செய்யும் உரிமை  ரிலைன்ஸ் நிறுவனத்திடம்  விற்று உள்ளது .அதனால் தமிழக முழுவதும் வங்கி கடன் வாங்கிய  மாணவர்களை  உடனடியாக கட்ட சொல்லி  ரிலைன்ஸ் ஆட்கள் போனிலும் நேரிலும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். வங்கி கடன் வாங்கும் போதே  படிப்பு  முடிந்த ஒராண்டு கழித்து  60  தவனையாக மாதாமாதம்   கட்டலாம் என  வங்கி்யின் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது 2010 ம் ஆண்டிலிருந்து  கல்வி கடன்  கொடுக்கப் படுகிற போதும் இவர்கள் கேட்க துவங்கிய பதினைந்தாவது நாளுக்குள் கட்ட வேண்டும் என்று சொல்வது சட்ட  விரோதமாகும் மேலும் பெரும் பாலும் வங்கிகளில் கடன் வாங்கி  பொறியியல் படிப்பவர்கள் தின க்கூலி வேலை செய்பவர்கள் பிள்ளைகளும் சிறு குறு விவசாயிகளின் பிள்ளைகளும் தான் . இவர்களை திடீரென  பதினைந்து நாட்களில் 250000  ரூபாய் கட்ட சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள். ஒட்டு மொத்த கல்வியையும்  தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு அடிப்படை  உரிமைகளில் ஒன்றான கல்விக்கு கடன் கொடுத்து அதை வசூலிக்கும் உரிமையையும் தனியாரிடம் கொடுத்து இந்த  நாட்டு  உழைக்கும் மக்களை அவர்களுக்கு கொத்தடிமையாக்கிவிட்டது இந்த  ஆளும் அரசுகள்.

ஸ்டேட் வங்கி, கல்விக் கடனை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்கும்போது 55% தள்ளுபடிசெய்து 45% மட்டுமே கொடுத்தால் போதும் என்று ஒப்பந்தம் போட்டு   உள்ளது. ஆனால் அந்த   நிறுவனம் மாண்வர்களிடம் வசூல் செய்யும் போது கணக்கற்று   வட்டி  என்ற பெயரில் வசூல் செய்கிறது. அதேபோல  ரிலைன்ஸ் கொடுக்க வேண்டிய  பணத்தில் 15% முன் பணமாக கட்டி விட்டு மீதி பணத்திற்கு 15 ஆண்டுகாலம்  எடுத்து கொள்ளலாம் இத்தனை சலுகைகளைம் வாங்கி கொண்டு மாண்வர்களை 15 நாட்களுக்குள் கட்ட சொல்லி தொல்லை கொடுத்து மரணத்தை  நோக்கி தள்ளி கொண்டு இருகிறது.

ரிலையன்ஸ் நிறுவனமே பல வங்கிகளுக்கு ரூ.1,25,000 கோடி கடன் பாக்கி வைத்திருக்கும்போது, அந்நிறுவனத்திடம் இந்தக் கடனை வசூல் செய்யும் வேலையை ஸ்டேட் வங்கி  எனும் பொதுத் துறை வங்கி  கொடுத்திருப்பது  மக்கள் விரோத செயல். மக்கள் பணத்தில் செயல்படும் ஒரு தேசிய வங்கி இப்படி மாணவர்களுக்கு எதிராக செயல்படுவதை மக்களே தட்டி கேட்டால்தான் இதுபோன்ற வங்கிகளின்  நடவடிக்கையை சீர்திருத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top