“ஐஎஸ் அமைப்பை நிறுவியவர்களில் ஹிலாரியும் ஒருவர்” டொனால்டு டிரம்ப் விமர்சனம்

“ஐஎஸ் அமைப்பை நிறுவியவர்களில் ஹிலாரியும் ஒருவர்” என்று குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

9158

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து இரு முன்னணி கட்சிகளின் (குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி) அதிபர் வேட்பாளர்களான டொனால்டு டிரம்பும், ஹிலாரி கிளிண்டனும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புளோரிடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற டொனால்டு டிரம்ப், “ஐஎஸ் அமைப்பை நிறுவியவர்களில் ஹிலாரியும் ஒருவர். இதற்காக ஐஎஸ் அமைப்பினர் ஹிலாரிக்கு விருது வழங்க வேண்டும்.

ஒர்லாண்டோ, சான் பெர்நார்டினோ சம்பவங்களை நினைவு கூருங்கள், உலக வர்த்தக மையத்தில் என்ன நடந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். இச்சம்பவங்கள்தான் ஐஎஸ் அமைப்பு நுழைய வழிவகுத்தது. ஐஎஸ் அமைப்பு உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருவதற்கான காரணமும் இதுவே.

உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது நான் அமெரிக்காவின் அதிபராக இருந்திருந்தால் அந்த தாக்குதல் நடைபெறாமல் தடுத்து நிறுத்தியிருப்பேன். ஏனெனில் அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்காவில் இருந்திருக்கவே மாட்டார்கள்.

நான் தோல்வி பயத்தால் இதனை கூறுகிறேன் என்று எதிரணியினர் நினைத்தால் அது வேடிக்கையானது.

குடியரசு கட்சி வலிமையாக உள்ளது. குடியரசு கட்சி இதற்கு முன்னர் இது போன்ற ஒற்றுமையுடன் இருந்ததில்லை. அதற்காக என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

முன்னதாக பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பேரணியில் பங்கேற்ற டொனால்டு டிரம்ப் “ஹிலாரி கிளின்டன் ஒரு சாத்தான்” என்று கூறியது சர்ச்சையை கிளம்பிய நிலையில் ஹிலாரியை ஐஎஸ் அமைப்புடன் டிரம்ப் தொடர்புப்படுத்தி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top