‘ஒலிம்பிக் கிராமத்தில் போதிய வசதிகள் இல்லை’ இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் புகார்

ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணி ஏற்கனவே பிரேசில் சென்று விட்டது. ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருக்கும் ஆக்கி அணியினருக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ரோலண்ட் ஒல்ட்மான்ஸ் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகியும், இந்திய அணியின் தலைமை அதிகாரியுமான ராகேஷ்குப்தாவுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘இந்திய ஆக்கி அணியினர் தங்க வைக்கப்பட்டு இருக்கும் அறைகளின் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. நாற்காலி, மேஜை உள்ளிட்டவை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் அளிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியின் போது எதிரணியின் ஆட்டங்களை பார்க்க வேண்டியது முக்கியமானதாகும். அதற்கு எங்களது அறையில் எந்த டெலிவிஷன் வசதியும் இல்லை. எனவே நாங்கள் 3 டெலிவிஷன் பெட்டிகளை வாங்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top