சிரியாவில் ரஷியா ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது

சிரியாவில் ரஷியாவின் ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த ஐவரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவரவில்லை.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் 5 பேருடன் சென்ற ரஷியாவின் மிக்-8 ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. “அலிபோவிற்கு உதவிப்பொருட்களை அழித்துவிட்டு திரும்பிய ரஷியாவின் மிக்-8 ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் ஓட்டுநர் உள்பட மூன்று பணியாளர்கள் மற்றும் இரண்டு அதிகாரிகள் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் இருந்த ஐவருக்கும் என்ன நடந்தது என்பது தெரியவரவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top