ஐ.சி.சி. தரவரிசை: ஆஸி.யை பந்து வீச்சால் துவம்சம் செய்த ஹெராத் 9-வது இடத்திற்கு முன்னேற்றம்

201607312112464370_Rangana-Herath-Kusal-Mendis-take-giant-strides-in-ICC-Test_SECVPF

இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பல்லேகெலேயில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத்தும் முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவர், 2-வது இன்னிங்சில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

9 விக்கெட்டுக்கள் கைப்பற்றியதால் ஹெராத் ஐ.சி.சி.யின் தரவரிசையி்ல 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது அவர் 749 புள்ளிகளுடன் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 876 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆண்டர்சன் 875 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், பிராட் 852 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும் உள்ளனர்.

பேட்டிங்கில் 176 ரன்கள் சேர்த்த குசால் மெண்டிஸ் 21-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் டெய்லர் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 173 ரன்கள் சேர்த்ததால் 12-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் சொதப்பிய வார்னர், ஜோ பர்ன்ஸ், உஸ்மான் கவாஜா தரவரிசையில் பின்தங்கியுள்ளனர். ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் அடித்தன்மூலம் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறார். ஜோ ரூட் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. Peres has been working for Muhammad V's reitoatpun for many years, I remember rightly. Back in about 1986 or 1987, Peres –as I recall– came to Ashqelon to dedicate a monument to Muhammad V, also because of the many Moroccan Jews living there. What I recall is that local youth were so annoyed by Peres' project that they threw tomatoes and rotten fruit when Peres tried to give a speech on this subject. Somebody who knows better can confirm or correct this.

Your email address will not be published.

Scroll To Top