விஜய் மல்லையாவின் ரூ.700 கோடி சொத்துகள் விரைவில் ஏலம்

201608010701457015_Vijay-Mallyas-assets-worth-Rs-700-crore-to-go-under-hammer_SECVPF

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்துகள் இம்மாதம் ஏலம் விடப்படுகின்றன.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடம் பெற்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். அதனால், இந்தியாவில் அவருக்கு சொந்தமான சொத்துகளை ஏலம் விட்டு கடனை மீட்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன.

ஆனால், ஏலத்தில் விற்க ஏற்கனவே நடந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

இந்நிலையில், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்துகள் இம்மாதம் இரண்டாவது முறையாக ஏலம் விடப்படுகின்றன. இவற்றில், விஜய் மல்லையா தனது சொந்த உபயோகத்துக்கு வைத்திருந்த சொகுசு ஜெட் விமானமும் அடங்கும். அதை கடந்த ஜூன் மாதம், ஏலத்தில் விற்க நடந்த முயற்சி வெற்றி பெறவில்லை.இதையடுத்து, அதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சேவை வரித்துறை, வருகிற 18-ந் தேதி மீண்டும் ஏலம் விடுகிறது. இதன் ஆரம்ப விலை, முன்பு ரூ.152 கோடியாக இருந்தது. தற்போது, விலை குறைவாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.

அதுபோல், மும்பை உள்நாட்டு விமான நிலையம் அருகே உள்ள கிங்பிஷர் ஹவுசும் ஏலம் விடப்படுகிறது. 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இதுதான், கிங்பிஷர் ஏர்லைன்சின் தலைமையகம் ஆகும். பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 17 வங்கிகள் கூட்டமைப்பு, வருகிற 4-ந் தேதி இதை ஏலம் விடுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.135 கோடி ஆகும்.

இதுதவிர, கிங்பிஷர் ஏர்லைன்சின் வர்த்தக குறியீடு, பிராண்ட், ‘லோகோ’, ‘பிளை தி குட் டைம்ஸ்’ என்ற புகழ்பெற்ற வாசகம் ஆகியவற்றையும் வங்கிகள் வருகிற 25-ந் தேதி ஏலம் விடுகின்றன.

கோவாவில், விஜய் மல்லையா விருந்து அளிக்க பயன்படுத்தும் கிங்பிஷர் வில்லா, இன்னோவா கார் உள்ளிட்ட 8 கார்கள், அலுவலக மரச்சாமான்கள் ஆகியவையும் இம்மாதம் ஏலம் விடப்படுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top