சவுதியில் வேலை இழந்து தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய மந்திரியை அனுப்ப முடிவு

201607311953141538_India-To-Bring-Back-Workers-Facing-Food-Crisis-In-Saudi_SECVPF

சவுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் திடீரென மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய இந்திய தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உணவின்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதியிவுள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய அமைப்புகள் மூலம் உணவு உள்ளிட்ட வசதிகளை வழங்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கடந்த மூன்று நாட்களில் 15 ஆயிரம் கிலோவிற்கு அதிகமான உணவு பொருட்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய மந்திரி வி.கே. சிங்கை நேரடியாக சவுதிக்கு அனுப்பி, சிறப்பு விமானம் மூலம் தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சவுதியை போல் குவைத்திலும் இந்தியர்கள் பலர் வேலை இழந்து தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top